திருப்பூர் அருகே நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர் அருகே நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் அருகே நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
எலெக்ட்ரீசியன்
தேனி மாவட்டம் அனஞ்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருடைய நண்பரான ராமநாதபுரம் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த தர்மாவும் (29) அதே நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இருவரும் நண்பர்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தர்மா ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தனக்கும் கொடுக்குமாறு கண்ணன் அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் தர்மா அவரிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கண்ணனின் தொந்தரவு அதிகரித்தது.
கல்லால் தாக்கி கொலை
இதனால் கண்ணனின் தொந்தரவை சமாளிக்க முடியாத தர்மா, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.பெரியபாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை செய்து வந்த தனது நண்பரான ராமநாதபுரம் திருவாடனை என்.மங்கலத்தை சேர்ந்த பாலமுருகனிடம் (30) இது பற்றி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தர்மாவும், பாலமுருகனும் கண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 28-10-2013 அன்று தர்மாவும், கண்ணனும் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி எஸ். பெரியபாளையத்துக்கு வந்துள்ளனர். பின்னர் பாலமுருகனுடன் சேர்ந்து பாருக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று 3 பேரும் மது அருந்தியுள்ளனர். கண்ணனுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்துள்ளனர். மதுபோதை தலைக்கேறியதும், தர்மாவும், பாலமுருகனும் ஏற்கனவே திட்டமிட்டபடி கண்ணனை கீழே தள்ளி அங்கு கிடந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளனர். இதில் தலை உடைந்து கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தர்மா, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் 21 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
கண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக தர்மா, பாலமுருகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேநேரம் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி அணுராதா தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story