மூட்டைகளில் இருந்த நெல் முைளக்க தொடங்கியது


மூட்டைகளில் இருந்த நெல் முைளக்க தொடங்கியது
x
தினத்தந்தி 16 April 2021 11:41 PM IST (Updated: 16 April 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த மூட்டைகளில் இருந்த நெல் முைளக்க தொடங்கியது. எனவே நெல் மூட்டைகளை விரைவில் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்;
 திருவாரூர் மாவட்டத்தில்  மழையால் சேதமடைந்த மூட்டைகளில் இருந்த நெல் முைளக்க தொடங்கியது. எனவே நெல் மூட்டைகளை விரைவில் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில்;விவசாயிகள் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 480 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. கடந்த மாதம் அறுவடை பணிகள் நிறைவு பெற்று 6 லட்சத்து 38 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்கு
இதில் பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்க நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட மில்லுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்வேறு காரணங்களால் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. 
மழை
இதில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலைங்களில் திறந்தவெளியில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.  தார்ப்பாய் போதிய அளவு இல்லாததால் பாதுகாப்பற்ற நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் நெல் மூட்டைகள் காய்ந்து கொண்டிருந்தது.  தற்போது வெப்ப சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருகிறது. 
திருவாரூர் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 14-ந் தேதி ஒரு மணி நேரம் கனமழை பெய்ததில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது. மேலும் மழைநீர் நெல் மூட்டைகளை சூழ்ந்து குளம் போல் தண்ணீர் நின்றது. இதனால் நெல் மூட்டைகள்  சேதமடைந்த நிலையில் தற்போது நெல் மணிகள் முளைக்க தொடங்கி உள்ளது.  இதைக்கண்ட நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் செய்வது அறியாமல் அச்சமடைந்துள்ளனர்.
சேமிப்பு கிடங்குகளுக்கு
சம்பா அறுவடைக்காக ஜனவரி மாதம் இறுதியில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் அறுவடை பணிகள் முடிவுற்றதால் கடந்த மாதம்  கொள்முதல் பணிகளை நிறைவு செய்தது. ஆனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு நகர்வு செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதில் மண் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய தார்ப்பாய்  வசதிகள் இல்லை. 
தற்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகளை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் நெல் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதில் நனைந்த நெல் மணிகள் முளைக்க தொடங்கி உள்ளது. 
கொள்முதல் செய்த நெல்லில் இழப்பு ஏற்படும்போது உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே  அதிகாரிகள் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்  என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story