மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா + "||" + Corona

கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா

கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா
கரூர் மாவட்டத்தில் புதிதாக 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
31 பேருக்கு கொரோனா
கொரோனாவின் இரண்டாம் அலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி காணியாளம்பட்டியை சேர்ந்த 6 வயது சிறுமி, பாரதிதாசன் நகரை சேர்ந்த 3 வயது சிறுமி, வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 43 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் 48 வயது பெண், காந்திகிராமத்தை சேர்ந்த 45 வயது பெண், 11 வயது சிறுவன், 15 வயது சிறுவன், வெள்ளியணையை சேர்ந்த 64 வயது முதியவர்.
வேலாயுதம்பாளையம்
அண்ணாநகரை சேர்ந்த 61 வயது முதியவர், தளவாபாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 30 வயது பெண், 68 வயது மூதாட்டி, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண் மற்றும் 33 வயது ஆண், 57 வயது ஆண் மற்றும் 50 வயது ஆண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 25 வயது பெண், தாந்தோணிமலையை சேர்ந்த 57 வயது ஆண் மற்றும் 55 வயது ஆண், வாங்கலை சேர்ந்த 65 வயது முதியவர், ராயனூரை சேர்ந்த 20 வயது பெண், கடம்பங்குறிச்சியை சேர்ந்த 38 வயது ஆண், புலியூரை சேர்ந்த 39 வயது ஆண் உள்ளிட்ட 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலையால் வெறிச்சோடியது: சென்னை விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கின
கொரோனா 2-வது அலை பரவலால் சென்னை உள்விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கியது. பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடியது.
2. பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி கமிஷனரிடம், முதல்-அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அந்த கருவிகள் பிரித்து அனுப்பப்பட்டது.
3. சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை
சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தகவல்.
4. 140 படுக்கை வசதிகளுடன் சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 140 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சித்தா, அலோபதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
5. 298 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் 29,272 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 298 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும், 29,272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.