நிறுவனத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது


நிறுவனத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 16 April 2021 11:53 PM IST (Updated: 16 April 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

நிறுவனத்தில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

நொய்யல்
புகளூர் மேம்பாலத்திற்கு கீழ்சர்வீஸ் சாலையில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 
நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த நிறுவனத்திற்குள் சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து, அந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story