மின்சாரம் பாய்ந்து ஆடு செத்தது


மின்சாரம் பாய்ந்து ஆடு செத்தது
x
தினத்தந்தி 16 April 2021 11:55 PM IST (Updated: 16 April 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் பாய்ந்து ஆடு பரிதாபமாக இறந்தது.

லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரத்தினம் அம்மாள் (வயது 65). இவர் நேற்று தனது ஆடுகளை அருகே உள்ள தரிசு நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆடு அந்த மின்கம்பி மீது உரசியது. இதில் ஆடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை நிறுத்தி அந்த பகுதியை சீரமைத்தனர்.

Related Tags :
Next Story