நெல்லையில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது


நெல்லையில்  பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 17 April 2021 12:07 AM IST (Updated: 17 April 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பிளஸ்-2 செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.

நெல்லை:
நெல்லையில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது.

பிளஸ்-2

கொரோனா 2-வது அலை பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பிளஸ்-2 தேர்வை ஒத்திவைக்கலாமா? என்று அரசும், கல்வித்துறையும் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

செய்முறை தேர்வு

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 119 மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது. இதில் சேரன்மாதேவி, நெல்லை, வள்ளியூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 614 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வு எழுதினர். இந்த தேர்வு வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்கு சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முககவசம் அணிந்தும் தேர்வை எழுதினார்கள்.

இந்த செய்முறை தேர்வை மாற்று பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடத்துகின்றனர். அங்குள்ள பள்ளி தலைமை ஆசிரியர் முதன்மை கண்காணிப்பாளராக இருந்து கண்காணிக்கிறார்.
இந்த செய்முறைத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக பகுதி, பகுதியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story