கொரோனா 2-வது அைல தீவிரம் புதுக்கோட்டையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சித்த மருந்துகள் அனுப்பி வைப்பு மாவட்ட கலெக்டர் தகவல்


கொரோனா 2-வது அைல தீவிரம்  புதுக்கோட்டையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சித்த மருந்துகள் அனுப்பி வைப்பு  மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2021 12:42 AM IST (Updated: 17 April 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சித்த மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை:
கபசுர  பொடி, நிலவேம்பு கசாயம் 
புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாம்ப்கால் மருந்து செய் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் தினந்தோறும் 450 கிலோ வீதம் கபசுர பொடி மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்பட்டு புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர பொடி மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளுக்கு 
இந்த டாம்ப்கால் மருந்து செய் நிலையத்தின் மூலம் நிலவேம்பு கசாயம் 9 வகையான சித்த மருத்துவ மூலிகைகளை கொண்டும், கபசுர பொடி 15 வகையான மூலிகைகளை கொண்டும் தயாரிக்கப்படுகிறது. தற்பொழுது இந்த நிலையத்தில் 7 ஆயிரம் கிலோ நிலவேம்பு கசாயமும், 3 ஆயிரம் கிலோ கபசுர பொடியும் கையிருப்பில் உள்ளதுடன் அரை கிலோ அளவில் பைகளில் அடைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஆய்வின் போது, இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) டாக்டர்.ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உம்மல் கதீஜா, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் டாக்டர் மோகன், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து உடனிருந்தனர்.

Next Story