கொத்தமங்கலத்தில் கன மழை; மரம் சாய்ந்து ஓட்டல் சேதம்


கொத்தமங்கலத்தில் கன மழை; மரம் சாய்ந்து ஓட்டல் சேதம்
x
தினத்தந்தி 17 April 2021 12:47 AM IST (Updated: 17 April 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலத்தில் கன மழை; மரம் சாய்ந்து ஓட்டல் சேதம் அடைந்தது

கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அருகில் உள்ள செரியலூர், நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம், மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களில் நேற்றும் மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காற்றுடன் கன மழை பெய்ததால் பல இடங்களிலும் தென்னை மட்டைகள் மற்றும் மரக்கிளைகள் உடைந்து  விழுந்தன. மேற்பனைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் மரக்கிளைகள் உடைந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டு முழுமையாக மின்சாரம் கொடுக்கப்பட்டது.
அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் நேற்று மாலை கன மழை பெய்த போது வாடிமாநகர் பகுதியில் உருமநாதன் என்பவர் குடும்பத்துடன் இணைந்து சிமெண்டு சீட்டு போடப்பட்ட ஓட்டல் மீது அருகில் நின்ற தென்னை மரம் உடைந்து சாயும் போது சத்தம் கேட்டு கடைக்குள் இருந்த உருமநாதன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் அவசரமாக வெளியேறியுள்ளனர். வெளியே வந்த பிறகு மரம் ஓட்டல் மீது விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

Next Story