அறந்தாங்கியில் அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார்.
அறந்தாங்கி:
தஞ்சாவூர் மாவட்டம், மேல ஒட்டங்காடு கே.கே.நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர், டிரம் செட்டு, அமரர் ஊர்தி (சொர்க்க ரதவாகனம்) வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி பட்டினகாட்டில் ஒருவர் இறந்து விட்டார். இவரது இறுதி ஊர்வலத்திற்காக சக்திவேல் தனது அமரர் ஊர்தி வாகனத்தில் குளிர்சாதன பெட்டியில் இறந்தவர் உடலை ஏற்றிக்கொண்டு மயானகரைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் குளிர்சாதன பெட்டியை மட்டும் அமரர் ஊர்தியில் ஏற்றிக்கொண்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் அமரர் ஊர்தியின் மேல் கூம்புபோல் இருந்ததன் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story