சிறுமியிடம் தங்க தாயத்தை பறித்த மூதாட்டி சிக்கினார்
சிறுமியிடம் தங்க தாயத்தை பறித்த மூதாட்டி சிக்கினார்
சோழவந்தான், ஏப்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு ஒரு சிறுமியின் கழுத்தில் கிடந்த தங்க தாயத்தை மூதாட்டி ஒருவர் நைசாக பறித்தார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனே அவர்கள் இது குறித்து கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது தங்க தாயத்தை பறித்த மூதாட்டியின் அடையாளம் தெரிந்தது. உடனே கோவில் ஊழியர்கள் அந்த மூதாட்டியை தேடிப் பிடித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story