மூதாட்டியிடம் நகை அபேஸ்
மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்யப்பட்டது.
மதுரை,ஏப்
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜா. இவரது மனைவி ஜெமிலாதேவி (வயது 65). இவர் வில்லாபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது டிப்டாப் உடையணிந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் ஜெமிலா தேவியிடம் இந்த பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் கழுத்தில் இவ்வளவு நகையை அணிந்து சென்றால் அதனை யாராவது பறித்து சென்று விடுவார்கள். எனவே நகையை கொடுங்கள் நாங்கள் காகிதத்தில் மடித்து கொடுக்கிறோம் என்று கூறி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை வாங்கினார்கள். பின்னர் அதனை காகிதத்தில் மடித்து அவரிடம் கொடுத்து வீட்டிற்கு சென்று நகையை அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் ஜெமிலாதேவி வீட்டிற்கு சென்று காகித்தை பிரித்த போது அதில் நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவரது கணவரிடம் தெரிவித்தார். அவர் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story