கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர் ஆலோசனை


கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 17 April 2021 1:30 AM IST (Updated: 17 April 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கலெக்டர் ஆலோசனை

மதுரை, ஏப்.17-
மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் மதுரையில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story