சுடுகாட்டில் குழந்தைைய நரபலி கொடுத்ததாக பரவிய தகவலால் பரபரப்பு
திருச்சுழி அருகே சுடுகாட்டில் குழந்தையை நரபலி கொடுத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே சுடுகாட்டில் குழந்தையை நரபலி கொடுத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை நரபலி?
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வடக்குப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை 100 நாள் வேலைக்கு சுடுகாடு வழியாக பெண்கள் சென்றனர். அப்போது பெண் குழந்தை போன்று சுடுகாட்டில் எரிந்து கிடப்பதாகவும், அதன் அருகே எலுமிச்சை பழம், தேங்காய் போன்ற பூஜை பொருட்கள் கிடப்பதாகவும், குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாகவும் வதந்தி காட்டுத்தீயாக பரவியது.
பரிகார பூஜை
இதனால் தங்களது உறவினர் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் காணாமல் சென்றுள்ளனரா என்று அப்பகுதி மக்கள் விசாரிக்க தொடங்கினர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் நேற்று முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து பரளச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருச்சுழி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். சுடுகாட்டில் யாரோ சிலர் சேவல் அறுத்து பரிகார பூஜை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.
Related Tags :
Next Story