மொபட் திருடியவர் கைது


மொபட் திருடியவர் கைது
x
தினத்தந்தி 17 April 2021 1:35 AM IST (Updated: 17 April 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் மொபட் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் காளையார் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இவரது மொபட் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் அருகே நிறுத்தி இருந்த போது திடீரென மாயமானது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவர் திருமுக்குளம் கிழக்குக்கரைப்பகுதியில் உள்ள பட்டறை கடை முன்பு நிறுத்தியிருந்த மொபட் மாயமானது. அதேபோல வில்லிபுத்தூர் மங்காபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் -  வத்திராயிருப்பு ரோட்டடி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மொபட்டும் மாயமானது. இவர்கள் தங்கள் ெமாபட் மாயமானது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் வத்திராயிருப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் மற்றும் வத்திராயிருப்பு போலீசார் மொபட் திருடிய நபரை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த குருநாதன் (வயது 50) என்பவர் தான் மொபட் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் குருநாதனை கைது செய்து, அவரிடம் இருந்த 4 மொபட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து நகர் போலீசார், குரு நாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story