இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தடுப்பூசி தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு,ஏப்
விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனைக் கண்டித்தும், அனைவருக்கும் தாராளமாக தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் கோவிந்தன், தாலுகா துணைச் செயலாளர் மகாலிங்கம், எஸ்.கொடிக்குளம் செயலாளர் துவான் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேத்தூர் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தலைமை தாங்கினார். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் வீராசாமி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, வக்கீல் பகத்சிங், ராஜகுரு, மாயாண்டி, அய்யனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நகர் குழு உறுப்பினர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரவி, துணைச் செயலாளர்கள் விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story