திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. 500 போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. 500 போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. 500 போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு நேர ஊரடங்கு அமல்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுபோல் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் வருகிற 30-ந் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்கள் காலையில் இருந்தே செல்ல தொடங்கினர்.
வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
ஒவ்வொரு பகுதிகளுக்கும் திட்டமிடப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக தொலைதூர மாவட்டங்களுக்கு அதிகாலை முதலே பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு பஸ்கள் செல்லும்படி திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இதுபோல் வேலைக்கு சென்று விட்டு இருசக்கரம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களும் இரவு 10 மணிக்குள் வீடுகளுக்கு சென்றனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருப்பூர் குமரன் சாலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் வாகனங்களில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து அனுப்பினர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வந்தவா்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்தை தடை செய்யும் வகையில் கல்லூரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் சிலவும் இரும்பு தடுப்புகள் மூலம் மூடப்பட்டன. புதிய பஸ் நிலையம் மற்றும் கோவில்வழி பஸ் நிலையமும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாலையில் இயக்கப்படும் ஒரு சில பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
300 போலீசார்
திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் போலீஸ் துணை கமிஷனர் வெற்றி வேந்தன் தலைமையில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுபோல் முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.
இதுபோல் மாநகரில் காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, சந்திராபுரம் சோதனை சாவடி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகரம் முழுவதும் 300 போலீசார் விடிய, விடிய சோதனையில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ்கமிஷனர் கார்த்தியேன் இரவு நேர ஊரடங்கு குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ரெயில் நிலைய வளாகத்தில்
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இரவு 10 மணிக்கு மேல் வந்தனர். தொடர்ந்து பஸ் வசதி இல்லாததால் அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் தூங்கினர். இதுபோல் ஒரு சில அரசு பஸ்கள் 10 மணிக்கு பஸ் நிலையத்திற்கு வந்தன.
அப்போது அந்த பகுதிகளில் ஓட்டல்கள் மற்றும் கடைகள் இல்லாததால் உணவு இன்றி டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் தவித்தனர். இதுபோல் பயணிகள் சிலரும் ஆங்காங்கே பஸ் நிலையங்களில் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் பஸ்களை எதிர்பார்த்தபடி இருந்தனர்.
Related Tags :
Next Story