அதிகாரி- ஊழியர்களுக்கு கொரோனா; வங்கி மூடல்
அதிகாரி-ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் (கனரா) ஈரோடு கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆய்வு பணிக்காக டெல்லியில் இருந்து தலைமை அதிகாரி ஒருவர் கடந்த வாரம் வந்திருந்தார். அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அந்த முடிவு வருவதற்குள் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்தநிலையில் அந்த அதிகாரிக்கும், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 3 வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்கியில் நோய் தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வங்கி மூடப்பட்டது.
இது தொடர்பாக அறிவிப்பு பலகையும் வங்கியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story