ஆசனூர் அருகே ரோட்டில் விழுந்த மூங்கில் மரம்


ஆசனூர் அருகே ரோட்டில் விழுந்த மூங்கில் மரம்
x

ஆசனூர் அருகே மூங்கில் மரம் ரோட்டில் விழ்ந்தது.

தாளவாடியை அடுத்த ஆசனூரில் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் ஆசனூர் மற்றும் திம்பம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. 
இதன்காரணமாக ஆசனூரை அடுத்த சீவக்காபள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூங்கில் மரம் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்ெதாடர்ந்து வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து முறிந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து 8.30 மணி அளவில் போக்குவரத்து தொடங்கியது

Next Story