சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்தது


சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 21 April 2021 2:11 AM IST (Updated: 21 April 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்தது.

கர்நாடக மாநிலம் சிக்கோலாவில் இருந்து சரக்கு வேன் ஒன்று கோவைக்கு 3 டன் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை கோவையை சேர்ந்த ராஜ் (வயது 30) என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சரக்கு வேனின் பிரேக்கை போட்டு உள்ளார். அப்போது சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் ராஜ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 1 டன் தக்காளி சேதம் அடைந்தது. 

Related Tags :
Next Story