இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
அரியலூர்:
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் நேற்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இரவு 9 மணியளவில் கடைகள் அடைக்கப்பட்டது. சாலையில் பஸ்கள் போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி முழுவதும் இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு அனைத்து கடைகளும் நேற்று இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டு, கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 9 மணிக்கு மேல் கடைவீதி பகுதியில் நடமாடிய நபர்களை போலீசார் அழைத்து அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அறிவுறுத்தல்
அதேபோல் தொலைதூரத்தில் இருந்து வந்த கனரக வாகனங்களை ஓய்வு எடுப்பதற்கு சரியான இடமாக பார்த்து நிறுத்திவிட்டு ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர். மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story