தாய் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் பெண் குழந்தையும் சாவு
தா.பழூர் அருகே குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த பெண் குழந்தை நேற்று இறந்தது.
தா.பழூர்:
2 குழந்தைகளுக்கு சிகிச்சை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபால். இவர் தா.பழூரில் உள்ள பாண்டிபஜார் கடைவீதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி(வயது 29). இவர்களுக்கு 2 வயதில் தர்ஷன், தர்ஷினி என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடைய அணைப்பில் இருந்த 2 குழந்தைகளும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி தர்ஷினி நேற்று காலை உயிரிழந்தாள். தர்ஷனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story