தேங்காய் மறைமுக ஏலம்


தேங்காய் மறைமுக ஏலம்
x
தினத்தந்தி 21 April 2021 2:22 AM IST (Updated: 21 April 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது

வாடிப்பட்டி
மதுரை மாவட்ட தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் விவசாயிகளின் 28,820 தேங்காய்கள் 12 குவியலாக மதுரை விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக விலையாக ரூ 14.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8.20-க்கும் சராசரியாக ரூ 8.64க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.2.49 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

Next Story