போலீஸ்காரர் வீ்ட்டின் அருகே பிடிபட்ட 3 பாம்புகள்


போலீஸ்காரர் வீ்ட்டின் அருகே பிடிபட்ட 3 பாம்புகள்
x
தினத்தந்தி 21 April 2021 2:22 AM IST (Updated: 21 April 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் வீ்ட்டின் அருகே 3 பாம்புகள் பிடிபட்டன

உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கவணம்பட்டி ராஜவடிவு தெருவைச் சேர்ந்தவர்  சத்தியமூர்த்தி. போக்குவரத்து போலீஸ்காரர். இவரது வீட்டின் அருகில் பாம்புகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் உசிலம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் 3 கட்டுவிரியன் பாம்புகளை பிடித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் இந்த 3 பாம்புகளையும் மீட்டு உசிலம்பட்டி வனச்சரக வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story