மதுரைக்கு 22 ஆயிரம் கொரோனா தடுப்பூசி


மதுரைக்கு 22 ஆயிரம் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 April 2021 2:22 AM IST (Updated: 21 April 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரைக்கு 22 ஆயிரம் கொரோனா தடுப்பூசி இன்று வருகிறது

மதுரை
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முதல் கட்டமாக 6 மையங்கள் அமைக்கப்பட்டன. இதைதொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 207 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 1 லட்சத்து 85 ஆயிரத்து 644 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆர்வமாக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்பு வரை தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களில் பயனாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். தட்டுப்பாட்டை போக்க 22 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று(புதன்கிழமை) மதுரைக்கு வர இருக்கிறது.

Next Story