விஜயமங்கலம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதியது டிரைவர் உயிர் தப்பினார்
விஜயமங்கலம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதியது.
திருப்பூரில் இருந்து பெருந்துறை சிப்காட்டுக்கு பிளீச்சிங் தண்ணீரை ஏற்றிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பகலாயூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில், அங்கு வைக்கப்பட்டிருந்த சிமெண்டு தடுப்புகள் சேதமடைந்தன. மேலும் லாரியின் முன்புறமும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் லாரியின் டிரைவர் எந்ததவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story