தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன


தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 April 2021 2:32 AM IST (Updated: 21 April 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் கல்லணை, தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம் மற்றும் ராஜராஜன் மணிமண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது

தஞ்சாவூர்;
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் கல்லணை, தஞ்சை அரண்மனை, அருங்காட்சியகம் மற்றும் ராஜராஜன் மணிமண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பரவியதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. பஸ், ரெயில் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, மளிகைக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன, மக்களும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் விட்டு விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவள் வீட்டைவிட்டு வெளியே வந்த பொருட்கள் வாங்குவதற்காக அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதையடுத்து படிப்படியாக பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் கோவில்கள், சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டன பஸ் போக்குவரத்து. ரெயில் போக்குவரத்து தொடங்கியது, இதுரை இன்னும் ரயில் போக்குவரத்து முழு அளவில் தொடங்கப்படவில்லை.
இரவு ஊரடங்கு
இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகமாக உள்ளது.தஞ்சை மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உறவை பரவலை தடுக்க நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது. ஊரடங்கின் போது பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது,
சுற்றுலாத்தலங்கள் மூடல்
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுதல் சுற்றுலாத்தலங்கள் போடப்பட்டன. தஞ்சை பெரிய கோவில் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை அரண்மனை மற்றும் அங்கு உள்ள அருங்காட்சியகம் தஞ்சை ராஜராஜன் மணிமண்டபம். சுற்றுலா தலமான கல்லணை உள்ளிட்ட இடங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
இதனால் இந்த சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இங்கு வழக்கமாக கடைகள் வைத்திருப்பவர்கள் மட்டும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் அவர்களும் வெறுமனே காத்திருந்தனர். சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது குறித்து தகவல் தெரியாத சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றுலா தலங்களுக்கு வந்தனர். அவர்கள் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். கல்லணையில் கரிகாலன் பூங்கா, காவிரி விளக்க கூடம், சிறுவர் பூங்கா, கரிகாலன் மணி மண்டபம் உள்ளிட்ட அனைத்தும் பூட்டப்பட்டன. கரிகாலன் மணி மண்டப வாசலில் இதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. காவிரி கொள்ளிடம், வெண்ணாறு, பாலங்களில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story