இரவு ேநர ஊரடங்கு; ெநல்ைலயில் சுற்றுலா தலங்கள் மூடல்


இரவு ேநர ஊரடங்கு; ெநல்ைலயில் சுற்றுலா தலங்கள் மூடல்
x
தினத்தந்தி 21 April 2021 2:40 AM IST (Updated: 21 April 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன,

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறை, களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பகுதிகள் நேற்று மூடப்பட்டன. அங்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. மேலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு யாரும் செல்லாதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்/

பாபநாசம் படித்துறையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்க முடியாதபடி சிவப்பு துணியை கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர். இதை அறியாமல் நேற்று காலையில் வெளியூர்களில் இருந்து வந்த பொதுமக்கள் அங்கு ஆற்றில் இறங்கி குளித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும், வருவாய்த்துறையினர் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். நெல்லை மாநகரில் அறிவியல் மையம், அரசு அருங்காட்சியகம் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளது. ேமலும் டவுனில் உள்ள வ.உ.சி. மணிமண்டபம், பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இரவு நேர பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து காலை நேரத்திலேயே அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு காலை நேரத்தில் பஸ்கள் புறப்பட்டு சென்றன. ஏனென்றால் இரவு 10 மணிக்குள் அந்தந்த ஊர்களுக்கு சென்றடையும் வகையில் பஸ்கள் புறப்பட்டு சென்றன.  இருந்தபோதிலும் ஊரடங்கு பிரச்சினையால் பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

மேலும் ெரயில்களிலும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கொரோனா தளர்வுக்கு பிறகு குறைவான ரெயில்கள் மட்டும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது. நேற்று நெல்லையில் இருந்து ஹபா, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்ற சிறப்பு ரெயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. குறிப்பாக ரெயில்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்ய விரும்பவில்லை. 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 2-ம் வகுப்பு சாதாரண பெட்டிகளில் மட்டுமே பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால் நெல்லையில் ெரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

நெல்லை டவுன் மார்க்கெட் பகுதி மற்றும் கடைவீதிகளில் இரவு நேர சரக்கு பரிமாற்றம் மேற்கொள்ள முடியாது என்பதால் பகல் நேரத்திலேயே லாரி, வேன்களில் சரக்குகளை ஏற்றி வெளியூர்களுக்கு எடுத்துச் சென்றனர். இதேபோல் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சரக்குகளும் பகல் நேரத்திலேயே கடைகளில் இறக்கப்பட்டன. நேற்று முதல் நாள் இரவு நேர ஊரடங்கு என்பதால் ஒரு சில கடைகள் அடைக்க தாமதம் ஏற்பட்டது. மேலும் பொதுமக்களும் ஒருசிலர் நடமாடினர். இதைக்கண்ட போலீசார் அவர்களை எச்சரித்து முழுநேர இரவு நேர ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலீசார் ஊரடங்கை கண்காணிக்கும் வகையில் இரவு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story