பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் இன்று முதல் காய்கறிகள் ஏல நேரம் மாற்றி அமைப்பு
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் இன்று முதல் காய்கறிகள் ஏல நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் 150 கடைகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் காய்கறிகள் வாங்கி செல்ல வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள அரசின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக மார்க்கெட்டில் தினசரி மாலையில் நடைபெற்று வந்த காய் கனிகள் ஏலம், இன்று (புதன்கிழமை) முதல் மதியம் 1 மணிக்கு ஏலம் நடத்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்குள் வெளியூர் கொண்டு செல்லப்படும் காய்கறிகள் அனைத்தும் அனுப்பப்பட்டு கடை விற்பனை முடிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை காலை முதலே மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மார்க்கெட் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story