ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆசிரியை-மாணவிகள் 10 பேருக்கு கொரோனா
ஆலங்குளம் அருகே அரசு பள்ளி ஆசிரியை-மாணவிகள் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பில் உள்ள 4 பிரிவுகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றிய நெல்லை டவுனை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்த 5, 6-ந்தேதிகளில் சிவகிரிக்கு தேர்தல் பணிக்கு சென்று இருந்தார். அவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்து வந்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
உடனே அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியைகள், மாணவிகள் என மொத்தம் 77 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 மாணவிகளுக்கும், 2 ஆசிரியைகளுக்கும் தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் பலருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story