ஆத்தூர் அருகே தபால் அதிகாரி வீட்டில் 38 பவுன் நகைகள் கொள்ளை?


ஆத்தூர் அருகே தபால் அதிகாரி வீட்டில் 38 பவுன் நகைகள் கொள்ளை?
x
தினத்தந்தி 21 April 2021 4:22 AM IST (Updated: 21 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

தபால் அதிகாரி வீட்டில் 38 பவுன் நகைகள் கொள்ளை?

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் தேரடி வீதி பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 57). இவர் ஆத்தூர் முல்லைவாடி தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி குணசுந்தரி. இவர் ஆத்தூர் அருகே உள்ள கிராமத்தில் வட்டார வள குழந்தைகள் மேம்பாட்டு மைய அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வர்ணம் பூசும் பணி தற்போது நடந்து வருகிறது. 
இந்த பணியில் ஆத்தூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் முருகானந்தம் மற்றும் குணசுந்தரி ஆகியோர் நேற்று முன்தினம் தங்களது வீட்டில் இருந்த 38 பவுன் நகைகளை வீட்டில் பிரிட்ஜில் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது பிரிட்ஜில் இருந்த 38 பவுன் நகைகளை காணவில்லை. எனவே அந்த நகைகளை, வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டவர்கள் திருடி இருக்கலாம் என முருகானந்தம் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நகைகளை நாங்கள் திருடவில்லை என கூறுகிறார்கள். நகைகள் காணாமல் போனதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Next Story