சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 April 2021 4:22 AM IST (Updated: 21 April 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

383 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 359 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 383 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 237 பேர், ஆத்தூரில் 18 பேர், ஓமலூரில் 17 பேர், மகுடஞ்சாவடியில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 11 பேர், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், தாரமங்கலத்தில் 8 பேர், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 6 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், எடப்பாடி, தலைவாசல் நரசிங்கபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், வாழப்பாடியில் 3 பேர், காடையாம்பட்டியில் 2 பேர், இளம்பிள்ளை, கொளத்தூர், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஒருவர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 108 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 2,019 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
மாவட்டத்தில் 42 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய்தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story