குரோம்பேட்டையை சேர்ந்தவர்: கொரோனா நோயாளி ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை மன உளைச்சலால் விபரீத முடிவு
குரோம்பேட்டையை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மன உளைச்சலில் தனியார் ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 51). கொரோனா தொற்று காரணமாக கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் இருந்த ஜன்னலில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மன உளைச்சல் காரணமாக
கொரோனா நோயாளியின் தற்கொலை குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ரங்கனை உறவினர்கள் யாரும் நேரில் சென்று பார்க்காததாலும் மனைவி மற்றும் மகனை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்ததாலும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story