திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 April 2021 6:43 AM IST (Updated: 21 April 2021 6:43 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருமழிசை ஜெகநாத புரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருக்கு கவிதா (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் வினோத்குமார் அடிக்கடி தன்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் புலம்பி வந்தார். மேலும் அவர் மது குடித்து விட்டு மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை

நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவிதா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story