மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணம் புறக்கணிப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு


மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணம் புறக்கணிப்பு மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு
x
தினத்தந்தி 21 April 2021 5:46 AM GMT (Updated: 21 April 2021 5:46 AM GMT)

மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்தை புறக்கணிப்பது என்று மீனவ கிராம பஞ்சாயத்தார் முடிவு செய்துள்ளனர்.

காரைக்கால்,

மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல ஊர்களில் தீபாவளியன்று கூட பட்டாசுகள் வெடிப்பதில்லை. இதுபோல் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்காக கிராமத்தில் கூட்டம் போட்டு ஊர் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

அந்தவகையில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல், தாடியை முழுமையாக சவரம் செய்யாமல் கலந்துகொள்கின்றனர். இது நமது பண்பாடாக தெரியவில்லை. இது குறித்து, பெண் வீட்டாரோ, மணமகன் வீட்டாரோ கண்டுகொள்வதும் இல்லை.

நமது பாரம்பரிய பண்பாட்டின்படி, திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே, பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில், இனிவரும் காலங்களில், திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால், அந்த திருமண விழாவை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.

Next Story