வக்கீலை தாக்கிய தந்தை, மகன் கைது


வக்கீலை தாக்கிய தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 21 April 2021 3:09 PM IST (Updated: 21 April 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

வக்கீலை தாக்கிய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி புதிய தமிழ் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). வக்கீல். இவர் தனது நண்பர் ராமலிங்கம் என்பவருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது30), அவரது தந்தை மூர்த்தி என்ற முகிலன் (52) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வக்கீல் சேகரை தரக்குறைவாக பேசி அருகில் இருந்த கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த சேகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையையும், மகனையும் கைது செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

அவரது உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story