உடன்குடி அனல் மின் நிலையத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று
உடன்குடி அனல்மின் நிலையத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் 11 பேருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனல்மின் நிலையம்
உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழியில் அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்கு துறைமுகக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான தனியார் நிறுவனங்களில் இருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு நடைபெற்ற கோரோனா பரிசோதனைகளின் முதல் கட்டப் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 21, 34, 29, 58, 26, 24, 23, 31, 34, 18, 19 வயதுடைய 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுகாதார பணி
இதையடுத்து வட்டார மருத்துவ ஆலுவலர் ஆனிபிரிமின் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
அனல்மின் நிலையப் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், அரசின் கோரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து சுகாதாரமாக வாழ வேண்டும் மருத்துவக குழுவினர் அறிவுறுத்தினார். வட்டார சுகாதாரா மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.
Related Tags :
Next Story