கோவில்பட்டியில் தொழிலாளி கைது
கோவில்பட்டியில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 56). இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 34). இதே பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் சங்கர் (வயது 26). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இரு குடும்பங்களுக்கும் இடையே பாதை பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலையில் கணபதி (வயது 46) மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோர் ஆடுகளை சுப்பிரமணியன் வீட்டு முன்பாக மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்கள். இதை அரவிந்த் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், அவரது தந்தையும், அரவிந்தனை கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தார்களாம். காயமடைந்த அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணபதியை கைது செய்தனர். அவரது மகன் சங்கரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story