ஏரலில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
ஏரலில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஏரல்:
ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவம் சார்பில் ஏரல் போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபிதா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர் செல்வகுமார் போலீசாருக்கு கபசுரக் குடிநீர் வழங்கி நோய் தடுப்பு முறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள் பற்றி விரிவாக பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளர் காந்திமதி, பணியாளர் ரத்தினசபாபதி செய்திருந்தனர்.
மேலும், ஏரல் காந்தி சிலை அருகில் முஸ்லிம் வணிகர் நலசங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நலசங்க தலைவர் பாக்கர்அலி தலைமை தாங்கினார். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெபிதா பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, அமலோற்பவம், மின்சாரதுறை உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், வணிகர் சங்க நிர்வாகிகள் நிஜாமுதீன், பிஸ்மிசுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story