திருவள்ளூர் அருகே தண்ணீர் என நினைத்து வார்னீஷ் குடித்த கார்பெண்டர் சாவு
திருவள்ளூர் அருகே தண்ணீர் என நினைத்து வார்னீஷ் குடித்த கார்பெண்டர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 41). கார்பெண்டர். இவருக்கு கீதா குமாரி ( 33) என்ற மனைவியும், ரூபேஷ் (11) மோனிஷ் (9) என்ற மகன்களும் உள்ள னர். இந்த நிலையில் மது பழக்கம் கொண்ட வெங்கடேசன் கடந்த 13-ந்தேதியன்று அளவுக்கதிகமாக மது குடித்து விட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு தாகம் எடுக்கவே தண்ணீர் என நினைத்து வார்னீஷை குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கீதாகுமாரி மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story