திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 2 பேர் கைது


திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 5:59 PM IST (Updated: 21 April 2021 5:59 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ஒன்றியம் வலசைவெட்டிக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு திருவள்ளூர் காமராஜபுரம் மேட்டு தெருவை சேர்ந்த ஸ்டீபன் (வயது 21), அன்சர் சரிஷீப் (வயது 22) விக்கி, ராஜேஷ், அசோக் ஆகியோர் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ஸ்டீபன், அன்சர் சரிஷீப் ஆகிேயாரை கைது செய்தனர்.

தப்பி ஓடிய விக்கி, ராஜேஷ், அசோக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story