பிளஸ்2 தேர்வுக்கான வினாத்தாள் பிரித்து அனுப்பி வைப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான வினாத்தாள் கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கான வினாத்தாள் கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
வினாத்தாள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பிளஸ்2 மாணவமாணவிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெறவில்லை. ஆனால் பிளஸ்2 மாணவமாணவிகளுக்கு மட்டும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிளஸ்2 தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப வினாத்தாள் வந்துள்ளது. இந்த வினாத்தாளும் கல்வி மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
மும்முரம்
இதுபோல் மாணவ-மாணவிகள் எழுதும் விடைத்தாள் தையல் எந்திரம் மூலம் தைக்கும் பணியும் அனைத்து பள்ளிகளும் நடந்து வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது. திருப்பூர் மாநகரில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுபோல் தேர்வுக்கு தேவையான எழுது பொருட்கள், நூல் உள்ளிட்ட பொருட்களும் வந்து கொண்டிருக்கிறது.
இந்த பொருட்களும் அவ்வப்போது பிரித்து அனுப்பப்படுகிறது. ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
Related Tags :
Next Story