தொழிற்சாலைகளுக்கு அபராதம்
தொழிற்சாலைகளுக்கு அபராதம்
பல்லடம்
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், மற்றும் தனியார் பள்ளி, ஆகியவைகளுக்கு மொத்தம் ரூ. 21,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுப் பணியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்திரகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சுடரொளி, சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், தமிழ்ச்செல்வி, கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story