தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம்
x
தினத்தந்தி 21 April 2021 7:42 PM IST (Updated: 21 April 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி
கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாநகராட்சி நகர் நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இடமாற்றம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்து இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் போதி இடவசதி இல்லாததால் தற்போது திருச்செந்தூர் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்புறம் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு தடுப்பூசி போட காத்திருப்பதற்கு தனி அறையும், முன்பதிவு செய்வதற்கு தனி இட வசதியும், கோவிஷீல்டு, கோவெக்சின் ஆகிய தடுப்பூசி போடுவதற்கு தனித்தனி அறைகளும், தடுப்பூசி போடப்பட்ட பிறகு கண்காணிப்பில் இருப்பதற்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை  8 மணி முதல்...
தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி பொறுப்பு மருத்துவர் மாலை அம்மாள் தலைமையில் தடுப்பூசி அலுவலர் தி. சங்கரசுப்பு முன்னிலையில் 20-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டோர் நேராக அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்துக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story