திருச்செந்தூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டவருக்கு கோரோனா
திருச்செந்தூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் மனைவி மற்றும் குழந்தையை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தாலுகா போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது.
மனைவி மீது தாக்குதல்
திருச்செந்தூர் காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 32). இவருக்கு முத்துலெட்சுமி (21) என்ற மனைவியும், 7 மாத குழந்தையும் உள்ளனர். கடந்த 19-ந் தேதி திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் பாஸ்ட் புட் கடை அருகே முத்துராஜ், முத்துலெட்சுமி கைகுழந்தையுடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது மனைவியிடம் மது குடிப்பதற்கு முத்துராஜ் பணம் கேட்டுள்ளார். அதற்கு முத்துலெட்சுமி கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரத்தில் மனைவியை அடித்தும், கையிலிருந்து 7மாத குழந்தையை கீழே எறிந்துள்ளார். இதில் முத்துலெட்சுமிக்கு குழந்தைக்கும் காயம் ஏற்பட்டது.
கொரோனா உறுதி
இதுகுறித்து முத்துலெட்சுமி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து முத்துராஜை கைது செய்தார்.
மேலும் கைது செய்வதற்கு முன்பு அவருக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே முத்துராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருந்தனர்.
பொதுமக்கள் வர தடை
இதை தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் அந்த போலீஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து வாசலில் கயிறு கட்டப்பட்டது. பொதுமக்களின் புகார் மனுக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே வைத்து பெற்றுக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story