எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்


எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 April 2021 8:05 PM IST (Updated: 21 April 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

எட்டயபுரம்:
 எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் நேற்று காலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் வழிகாட்டுதலின் படி சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து, சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், பஸ்நிலையம், பட்டத்து விநாயகர் கோவில், மெயின்பஜார், மேலவாசல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் முககவசம் அணியாமல் வெளியில் நடமாடிய 13 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து உனடியாக அபராத தொகையும் வசூல் செய்யப்பட்டது. 
மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story