தூத்துக்குடியில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
கிட்டங்கியில் சோதனை
தூத்துக்குடி அருகேயுள்ள மாப்பிள்ளையூரணி காமராஜ்நகர் மேற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிட்டங்கியில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து போலீசார் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்கோள் காப்பக வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனவர் அருண்குமார், வனக்காப்பாளர் ரங்கநாத் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று திடீரென சோதனை செய்தனர்.
100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
சோதனையின்போது அந்த சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிக்கிரீவன் (29) என்பரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மன்சூர் அலி என்பரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த திட்டம்?
பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தனரா? மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story