நீடாமங்கலம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் பகுதியில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நீடாமங்கலம் பேரூராட்சி குயவர் தெருவை சேர்ந்த ஒருவர், கடம்பூரில் ஒருவர், பொதக்குடியில் ஒருவர், வடுவூரில் 2 பேர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 4 பேர் திருவாரூர்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story