விழுப்புரத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி பயணம் போலீசார் எச்சரித்து அனுப்பினர்


விழுப்புரத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி பயணம் போலீசார் எச்சரித்து அனுப்பினர்
x
தினத்தந்தி 21 April 2021 9:43 PM IST (Updated: 21 April 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி பயணத்தவா்களை போலீசார் எச்சரித்து அனுப்பினா்.

விழுப்புரம், 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் யாரேனும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி வருகிறார்களா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

முதல் நாளான நேற்று, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சிலர் வெளியே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

 பின்னர் அவர்களிடம் கொரோனா நோயின் தாக்கம் குறித்து எடுத்துரைத்ததோடு இரவு நேர ஊரடங்கின் முதல் நாள் என்பதால் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

இனி வரும் நாட்களில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story