உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உரம் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டக்குழு தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட உரம் விலையை குறைக்க வேண்டும். புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இ்தில் நிர்வாகிகள் மஞ்சப்பன், கிருஷ்ணன் உள்பட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story