கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 10:11 PM IST (Updated: 21 April 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா

கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 11,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 11,062 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி விட்டனர். சிகிச்சை பலனின்றி இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 110 பேரின் உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து 110 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,580-ல் இிருந்து 11,615 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story